தேசியம்
செய்திகள்

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சுகாதார அமைச்சர்களுக்கும் இடையிலான சுகாதாரப் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது.

மாகாண, பிராந்திய சுகாதார அமைச்சர்களுடனான கூட்டு அறிக்கையில் இருந்து மத்திய அரசு விலகியுள்ளது.

இந்த மூலம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, சுகாதார-பராமரிப்பு நிதியை உயர்த்த எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைகிறது.

இந்த முடிவை ஏமாற்றமளிப்பவை என British Columbia சுகாதார அமைச்சர் Adrian Dix கூறினார்.

மத்திய நிதியுதவி 22 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் மாகாண, பிராந்திய அமைச்சர்கள் ஒன்றிணைந்தனர்.

ஆனாலும், கனடாவின் முதல்வர்கள் செவ்வாக்கிழமை (08) வெளியிட்ட அறிக்கை குறித்து அதிருப்தி அடைந்த மத்திய அரசாங்கம் ஒரு கூட்டு அறிக்கை, பின்னர் நடந்த செய்தி மாநாடு இரண்டிலிருந்தும் விலகியது.

Related posts

ஹைட்டி நெருக்கடியை எதிர்கொள்ள கனடா ஆதரிவளிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Ontarioவின் digital தடுப்பூசி கடவுச்சீட்டு செயலி!

Gaya Raja

Leave a Comment