தேசியம்
செய்திகள்

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கனடாவின் முக்கியமான கனிமங்களில் முதலீடுகளை விலக்கிக்கொள்ள மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டது.

கனடிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை ஒரு காரணமாக்குவதாக இதற்குப் பதிலளித்த சீனா குற்றம் சாட்டியது.

இந்த முடிவு சர்வதேச வர்த்தகம், சந்தை விதிகளை மீறியதாகவும் சீனா கூறியது.

கனடாவின் தேசிய பாதுகாப்பு, புலனாய்வு பிரிவின் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான கடுமையான ஆய்வுக்கு பின்னர் இந்த வெளியேற்ற உத்தரவை கனேடிய அரசாங்கம் எடுத்ததாக தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Shampagne ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கனடா அந்நிய நேரடி முதலீட்டை தொடர்ந்து வரவேற்கும் என கூறிய அமைச்சர், இந்த முதலீடுகள் தேசிய பாதுகாப்பிற்கும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எமது முக்கியமான கனிமங்கள் விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்தும் போது தீர்க்கமாக செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

கனேடிய விமானப் பயண துறையில் போட்டி அவசியம்: NDP

Lankathas Pathmanathan

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment