தேசியம்
செய்திகள்

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான குடிவரவு நிலை இலக்குகளை செவ்வாய்க்கிழமை (01) குடிவரவு அமைச்சர் Sean Fraser வெளியிட்டார்.

கனடா, தொழிலாளர் பற்றாக்குறையுடன் போராடி வரும் நிலையில், கனடாவின் பொருளாதார வளத்தை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என அமைச்சர் கூறினார்.

கனடா 1 மில்லியன் வெற்றிடங்களை கொண்ட தொழிலாளர் பற்றாக்குறையை தற்போது எதிர்கொள்கிறது

இந்த நிலையில் எங்கள் திட்டம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது என ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் Fraser கூறினார்.

பணித்திறன் அல்லது அனுபவத்தின் அடிப்படையில் புதிய குடிவரவாளர்களை அனுமதிப்பதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்

கடந்த ஆண்டு 405,000 புதிய குடிவரவாளர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருடத்தில் கனடாவுக்குள் வரவேற்கப்பட்ட அதிக அளவிலான புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை இதுவென பிரதமர் Justin Trudeau கூறினார்

நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு கனடா திட்டமிட்டுள்ளது.

இதேவேளை அகதிகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த குறைவும் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

கனடியத் தமிழர் பேரவையை நிராகரிக்க NCCT அழைப்பு!

Lankathas Pathmanathan

COVID கட்டுப்பாடுகளை விரைவாக நீக்குவது முதற்குடியினரிடம் தொற்றின் பரவலை அதிகரிக்கும்!

Gaya Raja

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment