தேசியம்
செய்திகள்

மூன்றாவது தவணையாக Toronto நகர முதல்வராகும் Tory

திங்கட்கிழமை (24) நடைபெற்ற நகரசபை தேர்தலில் Toronto நகர முதல்வராக John Tory மீண்டும் தெரிவானார்.

தொடர்ந்து மூன்றாவது தவணையாக இவர் Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ளார்.

Toronto நகர முதல்வராக இதுவே தனது கடைசி பதவிக் காலம் என Tory தெரிவித்தார்.

அவர் நான்கு ஆண்டுகள் பதவியில் இருக்கும் பட்சத்தில், Torontoவின் மிக நீண்ட கால நகர முதல்வராக பதவி வகிக்கும் வாய்ப்பை பெறுவார்.

Mississauga நகர முதல்வராக Bonnie Crombie மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக Mississauga நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Brampton நகர முதல்வராக Patrick Brown மீண்டும் தெரிவாகியுள்ளார்.

இவர் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக Brampton நகர முதல்வராக தெரிவாகிறார்.

Markham நகர முதல்வராக Frank Scarpitti மீண்டும் தெரிவானார்.

Vaughan நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட Steven Del Duca வெற்றி பெற்றுள்ளார்.

இவர் Ontario மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர், Liberal கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர்.

Hamilton நகர முதல்வராக Andrea Horwath தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவரான இவர், Hamilton நகரின் முதலாவது பெண் நகர முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.

Ontario மாகாண நகரசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாகாண முதல்வர் Doug Ford வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan

COVID விதிகள் மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment