உடல் செயல்பாடின்மை காரணமாக ஏற்படும் வருடாந்த சுகாதார பராமரிப்பு செலவுகள் கனடாவில் 421 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
போதுமான உடல் செயல்பாடு இல்லாததால், மோசமான மன ஆரோக்கியத்துடன், நீரிழிவு, சில புற்று நோய்கள் போன்ற தடுக்கக்கூடிய நோய்களை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கிறது
இந்த செலவினங்களில் கனடாவின் பங்கு 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது ஆண்டுக்கு 421 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில், 18 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் 26 சதவீதமும், பெண்களில் 31 சதவீதமும் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி பெறுவதில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் 11 முதல் 17 வயதுடைய கனேடிய சிறுவர்களில் 71 சதவீதமும், பெண்களில் 82 சதவீதமும் குறைந்தபட்ச உடற்பயிற்சி பெறுவதில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.