தேசியம்
செய்திகள்

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

எதிர்வரும் திங்கட்கிழமை Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பல்வேறு நகரசபைகளில் தமிழர்கள் பலரும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் Ontarioவில் சுமார் 3.8 மில்லியன் வாக்காளர்கள் இணையம் மூலம் வாக்களிக்க முடியும்.

Ontarioவில், 200க்கும் மேற்பட்ட நகரசபைகள் தேர்தலில் இணையம் மூலம் வாக்களிப்பைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்துள்ளன.

இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு நகரசபை தேர்தலில் 170 நகர சபைகளாக இருந்தது.

இம்முறை சில நகர சபைகள் காகித வாக்குச் சீட்டுகளை வழங்கவில்லை.
தற்போது, கனடாவில் உள்ள இரண்டு மாகாணங்கள், இரண்டு பிரதேசங்கள் மாகாண அல்லது நகரசபை மட்டத்தில் சில தேர்தல்களில் இணையம் மூலம் வாக்களிக்க அனுமதிக்கின்றன.

Related posts

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment