Burnaby RCMP அதிகாரியை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது முதல் நிலை கொலை குற்றம் சாட்டப்படுகிறது.
சந்தேக நபரான Jongwon Ham மீதான குற்றச்சாட்டுகள் புதன்கிழமை (19) அங்கீகரிக்கப்பட்டன.
செவ்வாய்கிழமை (18) Burnaby நகரில் RCMP அதிகாரி Constable Shaelyn Yang கத்தி குத்தியதில் மரணமடைந்தார்.
புதன் நீதிமன்றத்தில் ஆஜராகிய Ham, குறைந்தபட்சம் November 2 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒரே நேரத்தில் இரண்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.