British Colombia மாகாணத்தில் NDP தலைமைப் போட்டியில் ஈடுபட்டுள்ள தமிழரான அஞ்சலி அப்பாத்துரை போட்டியிலிருந்து விலத்தப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது.
கட்சியை தான் வருத்தப்படுத்தியது தனக்குத் தெரியும் என கூறியுள்ள அவர், அது கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து தன்னை விலக்குவதற்கான காரணியாகிவிடக் கூடாது என தெரிவிக்கின்றார்.
அவரது வேட்பாளர் தகமை குறித்த கட்சி முடிவு புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அவரது பிரச்சாரத்துடன் தொடர்புடைய உறுப்பினர் பதிவு தொடர்பான மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.