தேசியம்
செய்திகள்

Markham நகர விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணம்

Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்தனர்.

புதன்கிழமை மாலை 2 மணியளவில் Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறும் காவல்துறையினர் அவற்றுள் ஒன்று பார ஊர்தி என தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் இருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரது நிலை குறித்து  தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர், பாலினம் அல்லது வயது குறித்த எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

ஆனாலும் பலியானவர்களும் காயமடைந்தவர்களும் தமிழர்கள் எனவும் இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரண்டு பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது.

 

Related posts

Paris Paralympics: Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

இலைதுளிர் கால பொருளாதார அறிக்கை எதிர்கட்சிகளினால் விமர்சிக்கப்பட்டன

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் தொடரும் பனி புயல்

Leave a Comment