மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு 222 மில்லியன் டொலர்கள் உதவியை பிரதமர் அறிவித்தார்.
Montreal நகருக்கு வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை (11) பார்வையிட்ட பின்னர் பிரதமர் Justin Trudeau இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்றைய அறிவிப்பு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் எதிர்காலத்திற்கான மின்சார வாகனங்களுக்கான கனிமங்களின் உற்பத்தியில் கனடாவை முன்னிலையில் நிலை நிறுத்தும் என Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான பணம், மூலோபாய கண்டுபிடிப்பு நிதியத்தின் மூலம் பெறப்படவுள்ளது.