சர்வதேச மாணவர்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெள்ளிக்கிழமை (07) வெளியாகவுள்ளது.
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
Ottawaவில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியாகவுள்ளது.
சர்வதேச மாணவர்கள் குறித்த இந்த அறிவித்தலில் கனடாவின் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பான முக்கிய தகவல்கள் உள்ளாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் Fraser உடன் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரும் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது.