தேசியம்
செய்திகள்

71 சதவீதமான ஆசனங்களை வென்றார் Legault!

Quebec மாகாணசபை தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்துடன் François Legault வெற்றி பெற்றார்.

Legault பெரும்பான்மை அரசாங்கத்துடன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் Coalition Avenir Québec கட்சி 90 ஆசனங்களை வெற்றி பெற்றது.

1989ஆம் ஆண்டின் பின்னர் Quebec தேர்தலில் ஒரு கட்சி வென்ற அதிகபட்ச ஆசனங்கள் இதுவாகும்.

41 சதவீத பதிவான வாக்குகளையும், சட்டமன்றத்தில் 71 சதவீதமான ஆசனங்களையும் Coalition Avenir Québec கட்சி பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் Coalition Avenir Québec கட்சி 74 ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நான் அனைத்து Quebec வாசிகளுக்கு முதல்வராக இருப்பேன் என பெரும்பான்மை வெற்றியின் பின்னர் Legault கூறினார்

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் என கனடிய அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக Liberal கட்சி தெரிவாகியுள்ளது

இம்முறை 67.3 சதவீதம் வாக்குப்பதிவு அறிவிக்கப்படுகிறது.

இது 2018 தேர்தலின் வாக்குப்பதிவை விட சற்று அதிகமானதாகும்

Related posts

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

Lankathas Pathmanathan

குற்றச்சாட்டுகளை மறுக்கும் Hockey கனடா

Lankathas Pathmanathan

மாகாணசபை உறுப்பினர்களான மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment