தேசியம்
செய்திகள்

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Ontario கல்வி ஊழியர்கள் 96.5 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கனடிய பொது ஊழியர் சங்கம் திங்கட்கிழமை (03) இதனை அறிவித்தது.

55 ஆயிரம் கல்வி ஊழியர் உறுப்பினர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 10 நாட்களில் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பேரம் பேசும் குழு இப்போது பொது ஊழியர் சங்கத்தின் முன்மொழிவுகளுக்கு உறுப்பினர்களின் ஆதரவு குறித்த தெளிவான அறிகுறியுடன் பேச்சுகளுக்கு திரும்பலாம் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கு இடையிலான அடுத்த பேச்சுக்கள் எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

Related posts

Mississauga நகர முதல்வரானார் Carolyn Parrish

Lankathas Pathmanathan

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment