தேசியம்
செய்திகள்

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Fiona சூறாவளியின் பத்து நாட்களின் பின்னரும் பல்லாயிரக்கணக்கானவர்கள் Prince Edward தீவில் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கின்றது.

திங்கட்கிழமை (03) காலை வெப்பநிலை உறை நிலைக்கு கீழ் குறைந்த நிலையில் மின்சாரம் இல்லாத நிலை அங்கு தொடர்கின்றது.

Fiona தீவைத் தாக்கிய ஒரு வாரத்திற்கும் மேலாக 16 ஆயிரத்து 500 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் திரும்புவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகலாம் என திங்கள் காலை Maritime Electric கூறியது.

98 சதவீத வாடிக்கையாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் மின்சாரம் கிடைக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Toronto உயர்நிலைப் பாடசாலைக்கு வெளியே 15 வயது மாணவர் மீது துப்பாக்கி சூடு

Lankathas Pathmanathan

Leave a Comment