Hockey கனடாவில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறும் கனடிய விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய தலைமைக்கான தேவையை வலியுறுத்துகின்றார்.
Hockey கனடா குறித்த புதிய குற்றச்சாட்டுகளை அடுத்து தலைமைத்துவத்தை மாற்றுமாறு விளையாட்டு அமைச்சர் Pascale St-Onge மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
1989 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஒன்பது தீர்வுகளில் Hockey கனடா 7.6 மில்லியன் டொலர்களை செலுத்தியதாக கடந்த July மாதம் தெரியவந்தது.
இது வெளிப்படைத்தன்மை இல்லாததைக் காட்டுகிறது எனவும் Hockey கனடா பாலியல் வன்முறையை காப்பீட்டு பிரச்சனையாக கருதுகிறது எனவும் அமைச்சர் கூறினார்.