ரஷ்ய அதிகாரிகள் மீது கனடா வெள்ளிக்கிழமை (30) புதிய தடைகளை விதித்தது.
உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக ஜனாதிபதி Vladimir Putin அறிவித்துள்ள நிலையில் கனடா புதிய தடைகளை விதித்தது.
ஆனாலும் ரஷ்யாவின் இணைப்பு குறித்த அறிவித்தலுக்கு சட்டபூர்வமான தன்மை இல்லை என கனடிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இன்றைய அறிவிப்பின் மூலம் நாற்பத்து மூன்று ரஷ்யர்கள் இப்போது கனேடிய தடைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு மத்தியில் வலுவான தடைகள் விதிக்கப்படும் என இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது