தேசியம்
செய்திகள்

உக்ரைன் குறித்து கலந்துரையாட அமெரிக்க பயணமான கனடிய வெளியுறவு அமைச்சர்

உக்ரைன் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க தலைநகருக்கு பயணமாகியுள்ளார்.

இரண்டு நாட்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை செயலர் Antony Blinken, ஆகியோருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly சந்திப்புகளை நடத்துகின்றார்.

இந்த நிலையில் Baltic கடலில் எரிவாயு குழாய் கசிவுகள் ஒரு நாச வேலையின் விளைவு என்ற NATOவின் விளக்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை Joly எடுத்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இரட்டை Nord Stream குழாய்கள் வேண்டுமென்றே, பொறுப்பற்ற நாச செயல்களால் சேதமடைந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

NATO நட்பு நாடுகளின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் ஐக்கியமான பதில் நடவடிக்கையை Joly உறுதியளித்தார்.

Related posts

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க உத்தேசம்

Lankathas Pathmanathan

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Lankathas Pathmanathan

Leave a Comment