பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
ArriveCan செயலியின் பயன்பாடு குறைந்தாலும் பணியாளர் பற்றாக்குறை, எல்லையில் நீண்ட நேரம் காத்திருப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ArriveCan செயலி போன்ற தொழில்நுட்பத்தை நம்பாமல், அதிக பணியாளர்களை எல்லை கடவைகளில் பணிக்கு அமர்த்துமாறு தொழிற்சங்க தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.