Russia, Belarus ஆகிய நாடுகளில் உள்ள KHL அணிகளில் விளையாடும் கனேடிய hockey வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்தும் இந்த அணிகளில் 48 கனேடிய hockey வீரர்கள் விளையாடுகின்றனர்.
இவர்களில் 44 பேர் ரஷ்ய, பெலாரஷ்ய எல்லைகளுக்குள் உள்ள அணிகளில் விளையாடுகின்றனர்.
ஏனைய நால்வரும் கஜகஸ்தானில் உள்ள அணிகளில் விளையாடுகின்றனர்.
ரஷ்யாவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் கனடிய வீரர்களே KHL அணிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Belarus ஆதரவுடன் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததை கனடா எதிர்க்கின்றது.