St. Catharines நகரில் பணியிடத்தில் ஏற்பட்ட hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
THK Rhythm Automotive Plant என்ற நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Niagara சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியது.
ஒப்பந்ததாரர் ஒருவரினால் தற்செயலாக ஒரு அடைப்பான் சேதப்படுத்தப்பட்டதாகவும், அது ஐந்து லிட்டர் hydrochloric அமிலத்தை வெளியிட்டதாகவும் St. Catharines தீயணைப்பு பிரிவின் தலைவர் கூறினார்.
அமிலத்தின் வெளிப்பாடு மிகவும் சிறியதாக இருந்தது எனவும் தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
அனைத்து நோயாளிகளும் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அனைவரும் செவ்வாயன்று வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.