Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.
Fiona பேரழிவினால் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக பார்வையிட செவ்வாய்க்கிழமை (27) பிரதமர் Atlantic கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
Fiona ஏற்படுத்திய விரிவான சேதத்தை ஆய்வு செய்த பின்னர், மீள்தன்மையுடைய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதாக Prince Edward தீவில் Trudeau உறுதியளித்தார்.
இதேவேளை Atlantic கனடாவில் மீட்பு முயற்சிகளில் சுமார் 300 இராணுவ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாயன்று கூறினார்.