Atlantic கனடாவுக்கு இந்த வார பிற்பகுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார்
Fiona பேரழிவினால் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக பார்வையிடும் வண்ணம் இந்த பயணம் அமையவுள்ளது.
பேரளிவுகளை எதிர்கொண்டுள்ள Atlantic கனடியர்களுக்கு ஏனைய கனடியர்கள் தங்களால் ஆன உதவிகளை வழங்க வேண்டும் என பிரதமர் ஊக்குவித்தார்.
கனடிய செஞ்சிலுவைச் சங்க புயல் ஆதரவு முயற்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு நிகரான தொகையை மத்திய அரசு வழங்கும் என Trudeau கூறினார்.
மத்திய அரசாங்கத்தின் உதவிக்கான மாகாணங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், Nova Scotia, Prince Edward Island, Newfoundland சமூகங்களுக்கு சுமார் 100 கனடியப் படை உறுப்பினர்கள் அனுப்பப்படுகின்றனர்.