சீனாவுக்கான புதிய கனடிய தூதராக Jennifer May வெள்ளிக்கிழமை (23) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்பது மாதங்கள் சீனாவுக்கு கனடிய தூதர் இல்லாமல் இருந்த நிலையில் புதிய தூதரை பிரதமர் Justin Trudeau தெரிவு செய்துள்ளார்.
சீனாவுடனான சவாலான உறவைக் கடைப்பிடிப்பதில் கனடாவின் முன்னணி பிரதிநிதியாக May இருப்பார்.
கடந்த மாதம் வரை பிரேசிலுக்கான கனடாவின் தூதராக இவர் இருந்தவர்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் வெளியுறவுத் துறையில் May இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.