Fiona சூறாவளி கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.
Fiona சூறாவளி கிழக்கு கனடாவை நோக்கி வீசுவதால் அந்த பகுதி முழுவதும் சூறாவளி, புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
Fiona சனிக்கிழமை (24) அதிகாலையில் சக்திவாய்ந்த புயலாக Nova Scotia மாகாணத்தில் கரையைக் கடக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
இந்த நிலையில் Nova Scotia மாகாணம் முழுவதும் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Nova Scotia, Prince Edward தீவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் அதிக காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (23) இரவு Atlantic கனடாவில் மக்கள் Fiona புயலின் தாக்கத்தை உணர ஆரம்பித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணிவரை Nova Scotiaவில் 14 ஆயிரம் வீடுகளும் வணிக நிறுவனங்களும் இருளில் மூழ்கின.
Prince Edward தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் வணிக நிறுவனங்களும் மின்சாரத்தை இழந்துள்ளன.