தேசியம்
செய்திகள்

முன்னாள் Richmond Hill நகர முதல்வர் காலமானார்

Richmond Hill நகரின் முன்னாள் நகர முதல்வர் Dave Barrow காலமானார்.

முன்னாள் நகர முதல்வரும், நகரசபை உறுப்பினருமான அவர், தனது வாழ்நாளில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பொது சேவைக்காக அர்ப்பணித்தவர்.

Richmond Hill நகரை பூர்வீகமாக கொண்ட Barrow தனது 75 ஆவது வயதில் காலமானார்.

இது மிகவும் சோகமான, எதிர்பாராத செய்தி என Richmond Hill நகரின் நகர முதல்வர் David West கூறினார்

இவரது மறைவை குறிக்கும் வகையில் Richmond Hill நகரின் அனைத்து நகர கட்டிடங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் தாழ்த்தப்பட்டுள்ளன.

Related posts

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Pierre Poilievre வெற்றியை தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும்?

Lankathas Pathmanathan

NATO படையை வழி நடத்த கனடா இணக்கம்

Leave a Comment