தேசியம்
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை: Conservative இடைக்காலத் தலைவர்

Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என  செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தார்.

நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஒரு சமூக வலைதளப் பதிவில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

Manitoba மாகாணத்தின் Portage–Lisgar தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக Bergen 14 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறார்.

Erin O’Toole கட்சியின் தலைமை பதவியில் இருந்து இந்த ஆண்டு February மாதம் வெளியேற்றப்பட்ட பின்னர் கட்சியின் இடைக்காலத் தலைவராக Bergen செயல்படுகிறார்.
எதிர்வரும் சனிக்கிழமை (10) கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுத்த பின்னர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றப் போவதாக Bergen கூறினார்.

Manitobaவில் பிறந்த Bergen, 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் 2011, 2015, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 14 ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில், சமூக மேம்பாட்டுக்கான மாநில அமைச்சராகவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

Related posts

நிலநடுக்கம் குறித்து ஆராய துருக்கிக்கு இராணுவ மதிப்பீட்டுக் குழுவை அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan

நம்பகமான பயணிகள் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைகிறது!

Lankathas Pathmanathan

கனடிய மத்திய வங்கி $522 மில்லியன் இழந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment