தேசியம்
செய்திகள்

Saskatchewan கத்தி குத்து வன்முறை – தொடர்ந்து தேடப்படும் சந்தேக நபர்

Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களில் குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர், மேலும் 18  பேர் காயமடைந்துள்ளனர்.

James Smith Cree Nation, Weldon ஆகிய இடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக Saskatchewan RCMP தெரிவித்தது.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 31 வயதான Damien Sanderson, 30 வயதான Myles Sanderson ஆகியோரை RCMP தேடிவந்தது.

சந்தேக நபர்களில் ஒருவரான Damien Sanderson இறந்த நிலையில் திங்களன்று (05) கண்டுபிடிக்கப்பட்டார்.

இரண்டாவது சந்தேக நபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார்.

Myles மூன்று முதலாம் நிலை கொலை குற்றச்சாட்டு உட்பட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

Damien ஒரு முதலாம் நிலை  கொலை குற்றச்சாட்டு உட்பட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இந்த கத்திக்குத்து சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பவை என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

எந்த விதமான வன்முறைக்கும் நம் நாட்டில் இடமில்லை, எனவும் திங்கட்கிழமை Ottawaவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Saskatchewan முதல்வர் Scott Moe, James Smith Cree Nation தலைவர்களிடம் Trudeau கலந்துரையாடியுள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் தெரிவித்தார்.

Ottawa நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள கொடிகள், Saskatchewanனில் உள்ள அனைத்து மத்திய கட்டிடங்களில் உள்ள கொடிகளும் அரைக்கம்பத்தில் தாழ்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

Ontario முதல்வர்  Doug Ford உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த கத்திக்குத்து சம்பவங்கள் குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகத் தலைவர்கள் பலரும் Saskatchewan தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சீனாவின் COVID நிலை குறித்து அவதானித்து வரும் கனடிய பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan

சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்?

Lankathas Pathmanathan

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத Ontario முதல்வர்

Gaya Raja

Leave a Comment