நீண்ட வார இறுதிக்கு முன்னதாக Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை குறைகிறது.
வெள்ளிக்கிழமை (02) எரிபொருளின் விலை மேலும் இரண்டு சதங்களால் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 149.9 சதமாக விற்றபனையாகவுள்ளது
புதன் (31) இரவு எரிபொருளின் விலை ஏழு சதத்தினால் குறைந்து லிட்டருக்கு 151.9 சதமானது.
இது January மாத நடுப்பகுதியின் பின்னனரான குறைந்த விலையாகும்.
ஞாயிற்றுக்கிழமை (04) எரிபொருளின் விலை லிட்டருக்கு 146 சதமாக விற்றபனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.