Albertaவில் நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland துன்புறுத்தப்பட்டது குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
பொது அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறும் RCMP, August 26ஆம் திகதி Freeland எதிர்கொண்ட வாய்மொழி துன்புறுத்தலை விசாரித்து வருவதாக கூறுகிறது.
இந்த நிலையில் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது
Freeland துன்புறுத்தலுக்கு பின்னர் இந்த விடயம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino ஆராய்ந்தும் வருவதாக கூறப்படுகிறது
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் Mendicino கூறினார்.
பலர் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் ஒரு பாரபட்சமான பிரச்சினை அல்ல எனவும் Mendicino கூறினார்.
வன்முறை, மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.