LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் கனடா 100 மில்லியன் டொலர் முதலீடு ஒன்றை அறிவித்துள்ளது.
கனடாவின் முதலாவது மத்திய LGBTQ2S+ செயல் திட்டம் என இது அழைக்கப்படுகிறது.
பிரதமர் Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை (28) இந்த திட்டத்தை அறிவித்தார்.
பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் பன்முகத்தன்மையை ஆதரிப்பதற்கும் தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது என Trudeau கூறினார்.
இதில் 75 சதவீத நிதி பன்முகத்தன்மை, உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படும் என Trudeau கூறினார்.