December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமானது.

October மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வாக்களிப்புக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஐந்து பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் François Legaultடின் கட்சி கடந்த 2018 தேர்தலில் பெற்றதை விட அதிக பெரும்பான்மையை வெல்லும் என  கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

Legault நான்கு தேர்தல்களை எதிர்கொண்டவர்.

ஏனைய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்கொள்ளும் முதலாவது தேர்தல் பிரச்சாரம் இதுவாகும்.

 சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு, Legaultடின் கட்சி 76 இடங்களைக் கொண்டிருந்தது.

Quebec Liberal கட்சி 27, Québec solidaire  கட்சி 10,  Parti Québécois  ஏழு,  பேரும் பெற்றனர். Quebec Conservative கட்சி ஒன்று என ஆசன பகிர்வுகள் மாகாணசபையில் இருந்தன.

தவிரவும் நான்கு பேர் சுயேட்சை உறுப்பினர்களாக இருந்தனர்.

Related posts

ATV விபத்தில்  ஒரு குழந்தை மரணம் – மூவர் காயம்

Lankathas Pathmanathan

ஊனமுற்றோர் நலன்களுக்கான புதிய சட்டமூலம்

Lankathas Pathmanathan

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Leave a Comment