கனடிய தமிழர் பேரவையின் Tamil Fest தமிழர் தெரு விழா இந்த வார விடுமுறையில் நடைபெறுகிறது.
சனி (27), ஞாயிறு (28) தினங்களில் Markham வீதியில் தமிழர் தெரு விழா 2022 நிகழ ஏற்பாடாகியுள்ளது.
COVID பெருந்தொற்று காரணமாக 2019 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் தெரு விழா Markham வீதியில் இம்முறை மீண்டும் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வு சனி மதியம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது
சனிக்கிழமை நிகழ்வுகள் இரவு 11 மணி வரையிலும் தொடரும் எனவும், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் இரவு 9 மணிக்கு முடிவுக்கு வரும் எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக Scarborough நகரில் Markham வீதி Passmore வீதிக்கும் McNicoll வீதிக்கும் இடையில் வாகன போக்குவரத்துக்கு மூடப்படும்.
வெள்ளி (26) இரவு 10 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு Markham வீதி மூடப்படும்.
இந்த வீதித் தடை திங்கட்கிழமை (29) அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன் காரணமாக Markham வீதியில் பயணிக்கும் 102 இலக்க TTC பேருந்து தற்காலிக பாதை மாற்றத்தை எதிர்கொள்ளும் என Toronto போக்குவரத்து சபை அறிவித்தது.
இம்முறை தமிழர் தெரு விழாவில் இலங்கை, இந்தியா, கனடா என பல சிறப்பு விருந்தினர்களை கலந்து கொள்கின்றனர்.