எதிர்வரும் இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் 1,250 புதிய ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையை தனது அமைச்சு மேற்கொண்டு வருவதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார்.
1.3 மில்லியனுக்கும் அதிகமான குடியேற்ற விண்ணப்பங்கள் இன்னும் தேக்க நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட நிலையில் இந்த அறிவித்தலை அமைச்சர் புதன்கிழமை (24) வெளியிட்டார்.
கனடாவில் குடியேற்ற நகர்வுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் இவை என அமைச்சர் Fraser கூறினார்.
குடியேற்ற விண்ணப்பங்களை நிவர்த்தி செய்வதற்கு முதலில் எதிர்பார்த்ததை விட சில மாதங்கள் மேலும் எடுக்கலாம் என அவர் கணித்துள்ளார்.
COVID தொற்றால் ஏற்பட்ட குடியேற்ற விண்ணப்பங்களின் பின்னடைவுகளை இந்த வருடத்தின் இறுதிக்குள் அகற்றுவதாக கடந்த January மாதம் குடிவரவு அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
ஆனாலும் உக்ரேனின் நெருக்கடி குடியேற்ற விண்ணப்பங்களின் பின்னடைவை மோசமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.