Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை Moderna நிறுவனம் கனடாவிற்கு வழங்கவுள்ளது.
Moderna நிறுவனம் திங்கட்கிழமை(22) இதனை அறிவித்துள்ளது.
கனேடிய அரசாங்கம் 2022, 2023 ஆம் ஆண்டிற்கான COVID தடுப்பூசியை வழங்குவதற்காக கடந்த ஆண்டு Moderna நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
Moderna நிறுவனத்தின் ஆறு மில்லியன் COVID தடுப்பூசியை Omicron தடுப்பூசியாக மாற்ற Modernaவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
தவிரவும் Omicron மாறுபாட்டை கொண்ட கூடுதலாக 4.5 மில்லியன் தடுப்பூசிகளை கனடா கொள்வனவு செய்யவுள்ளது.
அடுத்த ஆண்டு கனடாவை வந்தடைய திட்டமிடப்பட்ட1.5 மில்லியன் தடுப்பூசிகளை இந்த ஆண்டு கனடாவை வந்தடைய இணக்கம் ஏற்பட்டுள்ளது.