இலங்கையின் சமீபத்திய நிலைமை குறித்து கனடிய துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இந்த சந்திப்பில் Scarborough Rouge Parkதொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி உட்பட தமிழ் கனடிய சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நல்லாட்சி, சமாதானம், மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான நியாயமான, தொடர்ச்சியான கோரிக்கைகளை இலங்கையின் சமீபத்திய நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என இந்த சந்திப்பு குறித்து Freeland தெரிவித்தார்
இந்த சவாலான நேரத்தில் கனடா எவ்வாறு இலங்கையில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பது குறித்த கருத்துக்களைபகிர்ந்து கொண்ட தமிழ் கனேடிய சமூகத்தின் உறுப்பினர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து கனடாவின் துணை பிரதமருடனான மிக முக்கியமான உரையாடல் இதுவென நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.