தேசியம்
செய்திகள்

கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்யும் கனடா

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய கனடா திட்டமிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, வெளியுறவு அமைச்சர் Melanie Joly இணைந்து வெள்ளிக்கிழமை (05) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியானது.

August 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையின் மூலம் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிரந்தர முடக்கம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என அறிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை கடந்த May மாதம் தாக்கல் செய்தபோதிலும், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

Gaya Raja

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment