கனடிய வதிவிடப் பாடசாலைகளில் முதற்குடி மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
வதிவிட பாடசாலைகளில் இணைய வேண்டிய கட்டாயத்தின் போது முதற்குடி மக்கள் எதிர்கொண்ட துஷ்பிரயோகங்கள் இனப்படுகொலைக்கு சமம் என திருத்தந்தை கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆறு நாள் கனடிய பயணத்தை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
கனடாவில் இருந்து Rome திரும்பிய விமானத்தில் செய்தியாளர்களிடம் போப்பாண்டவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளிவரும் என Vatican அதிகாரிகள் தெரிவித்தனர்
கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் தனது பயணத்தின் போது பலமுறை பகிரங்க மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் போப் கனடாவில் இருக்கும்போது இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என சில முதற்குடி தலைவர்கள் விமர்சனம் வெளியிட்டனர்.