RCMP அதிகாரி ஒருவர் புதன்கிழமை (27) காலை Quebec காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னர், RCMP அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
புதன் அதிகாலை இல்லமொன்றிக்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர் அங்கு கத்தியுடன் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
மரணமானவர் 48 வயதான RCMP அதிகாரி என தெரியவருகிறது.
அவரது இல்லத்தில் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து Quebec புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.