நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு கனடாவுக்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை, புதன்கிழமை Quebec நகரை சென்றடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் Edmonton நகரில் சந்திப்புகளை மேற்கொண்ட அவர் புதன்கிழமை காலை விமானம் மூலம் Quebec நகரை சென்றடைந்தார்.
சக்கர நாற்காலியில் பயணித்த பிரான்சிஸ், விமான நிலையத்தில் வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்கள், முதற்குடித் தலைவர்கள், Quebec முதல்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரால் வரவேற்கப்பட்டார்.
அங்கு திருத்தந்தை பிரான்சிஸ் பிரதமர் Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோரை சந்தித்தார் .
பின்னர் Quebec நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க Citadelleலில் பிரான்சிஸ் உரையாற்றனார்.
கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு வெட்கத்தையும் வருத்தத்தையும் தெரிவிப்பதாக அவர் தனதுரையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
வெள்ளிக்கிழமை திருத்தந்தை தனது கனடிய பயணத்தை Nunavut பிரதேசத்தின் தலைநகர் Iqaluitடில் நிறைவு செய்யவுள்ளார்.