தேசியம்
செய்திகள்

Monkeypox: பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டியது அவசியம்!

Monkeypox தொற்றால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

Monkeypox தொற்றின் பரவல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு கடந்த வார இறுதியில் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்தது.

இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்கள் தடுப்பூசி பெறுமாறு கனேடிய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

தொற்றின் அதிக ஆபத்துள்ளவர்கள் அண்மைய நாட்களில் தடுப்பூசி பெறுவது குறைந்துள்ளதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam புதன்கிழமை (27) கூறினார்.

கனடிய அரசாங்கம் மாகாணங்கள், பிரதேசங்களுக்கு வழங்கிய 70 ஆயிரம் Monkeypox தடுப்பூசிகளில் 27 ஆயிரம் மாத்திரமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதன்கிழமையுடன் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் அவர்களது சராசரி வயது 36 எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் ஆண்களிடையே Monkeypox தொற்று பரவுகிறது என Dr. Tam கூறினார்.

இந்த நிலையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, பாதுகாப்பான உடலுறவு முறைகளை கைக்கொள்ள வேண்டும் என Dr. Tam அறிவுறுத்தியுள்ளார் .

ஓரினச்சேர்க்கை, இருபாலின ஆண்களுக்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் தேவையை அவர் வலியுறுத்தினார்.

ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் தொற்றில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த தகவல்கள் வழங்க கனடாவின் பொது சுகாதார நிறுவனம் நம்பகமான குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக Dr.Tam கூறினார்.

Related posts

உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறுகின்றது

Gaya Raja

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment