Pickering நகரில் வாகனம் ஒன்று Ontario ஏரியில் நுழைந்ததில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை (19) மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலியானவர் 43 வயதான நிமல்ராஜ் குகதாசன் என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கஜன் என அழைக்கப்பட்ட இவர் இலங்கையில் கோண்டாவிலை பிறப்பிடமாக்கவும், கனடாவில் Brampton நகரை வதிவிடமாகவும் கொண்டவராவார்.
இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.