February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் குறையும் எரிபொருளின் விலை!

Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைய உள்ளது.

பல மாதங்கள் காணாத மிகக் குறைந்த அளவிற்கு Ontarioவில் எரிபொருளின் விலை குறைய உள்ளது என எதிர்வு கூறப்படுகிறது.

தெற்கு Ontarioவில் April மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் காணப்படாத விலையில் எரிபொருள் விற்பனையாகவுள்ளது.

வியாழக்கிழமை (14) லிட்டர் ஒன்றுக்கு 7 சதம் குறையும் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் மேலும் 2 சதம் குறையவுள்ளது.

இதன் மூலம் வெள்ளிக்கிழமை தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு 175.9 சதமாக விற்பனையாகவுள்ளது.

July நடுப்பகுதியில் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிக்கு 2 டொலர் 10 சதத்திக்கு மேல் உயரும் முன்னர் இந்த குறுகிய கால விலை வீழ்ச்சி எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Lankathas Pathmanathan

நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கான சேவையை WestJet நிறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment