கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (13) தனது முக்கிய வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது.
1998க்குப் பின்னரான அதி கூடிய வட்டி விகித அதிகரிப்பு இதுவாகும்.
இதன் மூலம் வட்டி விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகமான பணவீக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவை மத்திய வங்கி எடுத்துள்ளது.
பணவீக்கத்தை அதன் இலக்கான இரண்டு சதவீதத்திற்குக் கொண்டு வருவதற்கு மிகவும் தீவிரமான அணுகுமுறையை இந்த முடிவு குறிக்கிறது.
பொருளாதார வல்லுனர்கள் வட்டி விகித உயர்வை 7.5 சதவீதமாக கணித்திருந்தனர்.
May மாதத்தில் கனடிய பணவீக்கம் 39 ஆண்டுகளில் இல்லாத அளவான 7.7 சதவீதத்தை எட்டியது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் June மாதத்திற்கான பணவீக்கத் தரவை எதிர்வரும் 20ஆம் திகதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.