Ontario மாகாணத்தின் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல் புதன்கிழமை (13) வெளியாக உள்ளது.
Ontario மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன் காலை இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார்.
நான்காவது COVID தடுப்பூசிகளின் தகுதியை விரிவாக்குவது தொடர்பாக இந்த அறிவிப்பு அமையவுள்ளது.
Ontarioவில் தொற்றின் ஏழாவது அலைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகிறது.
அண்மையில் தொற்றுகளின் எண்ணிக்கையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாவது இங்கு குறிப்பிடத்தக்கது.