தேசியம்
செய்திகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் செயலிழப்புகளின் சேதத்தைத் தணிக்க ஒரு முறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்த கனடாவின் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne பணித்துள்ளார்.

Rogers தலைமை நிர்வாக அதிகாரி உட்பட ஏனைய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்களுடன் Champagne திங்கட்கிழமை (11) சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறையை உருவாக்குவதற்கு 60 நாட்கள் அவகாசம் அளித்ததாக Champagne கூறினார்.

Rogers சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை (08) ஒரு நாள் முழுவதும் சேவை செயலிழப்பை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்டது.

Rogers செயலிழப்பு பல கைத்தொலைபேசி, இணைய சேவைகள், வங்கிகள், debitகொள்முதல், கடவுட்சீட்டு அலுவலகங்கள், கனடாவின் ArriveCAN செயலி ஆகியவற்றை பாதித்துள்ளது.

முன்பு அறிவித்தபடி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை இழப்புக்கான கட்டண மீள் வழங்கலை முன்னெடுப்போம் எனவும் அந்த செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம் எனவும் Rogers நிறுவனம் தெரிவித்தது.

Related posts

பிரதமருடன் சந்திக்க Atlantic மாகாணங்களின் முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Lankathas Pathmanathan

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment