கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை (13) 0.75 சதவீதம் உயர்த்தும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கணிப்பு வெளியானது.
கனடாவில், May மாதத்தில் பணவீக்கம் 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.7 சதவீதத்தை எட்டியது.
June மாதம் 1ஆம் திகதி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கனடிய மத்திய வங்கி, அரை சதவீதம் உயர்த்தி, அதை 1.5 சதவீதமாக கொண்டு வந்தது.
பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் உள்நாட்டு, சர்வதேச காரணிகளை கனடிய மத்திய வங்கி கண்டறிந்துள்ளது.