தேசியம்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானிய தலைவர் கனடாவின் நெருங்கிய நண்பர்: Trudeau

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானிய தலைவர் Shinzo Abe கனடாவின் நெருங்கிய நண்பர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்துடன் கனடா ஒரு நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது என Trudeau குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற G20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly, ஜப்பானிய வெளியுறவு அமைச்சருக்கு கனடாவின் இரங்கலைத் தெரிவித்ததார்.

மேற்கு ஜப்பானில் வெள்ளிக்கிழமை (08) Abe படுகொலை செய்யப்பட்டார்.

அவர் ஒரு பிரச்சார உரையை நிகழ்த்தியபோது துப்பாக்கிதாரியினால் பின்னால் இருந்து சுடப்பட்டார்.

Related posts

கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Lankathas Pathmanathan

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் வீழ்ச்சி!

Gaya Raja

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றமில்லை

Leave a Comment