COVID தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகளின் தரவுகளுக்கான ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க கனடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
சர்ச்சைக்குரிய ArriveCan செயலியை கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மூத்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையங்கள், தரை எல்லைகளில் சோதனை செய்வதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த முக்கிய சுகாதார தகவல்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திற்கு இந்த செயலி வழங்குகிறது.
கனடாவில் COVID பாதுகாப்பின் இறுதி கடைசி அரணாக ArriveCan செயலி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.