February 22, 2025
தேசியம்
செய்திகள்

Patrick Brownக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான மதிப்பாய்வு கனடிய தேர்தல் ஆணையரால் ஆரம்பம்

Conservative தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Patrick Brownக்கு எதிரான கட்சியின் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை கனடிய தேர்தல் ஆணையர் மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown கடந்த செவ்வாய்க்கிழமை தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Brown மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை மதிப்பாய்வு செய்வதாக தேர்தல் ஆணையரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தலைமை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக Brown தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து அவரைத் தகுதி நீக்கம் செய்யும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்புவதாக Conservative கட்சியிடம் அவரது வழக்கறிஞர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

Brown எந்தவிதமான தவறான நடவடிக்கையில் ஈடுபட வில்லை என அவரது வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் உந்துதல் காரணமாக Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் Brown குறித்த புகார் அவரது சொந்த பிரச்சார குழுவிடமிருந்து வந்தது என Conservative கட்சியின் தலைவர் Robert Batherson கூறினார்.

Related posts

புதிய சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த மாகாணங்களின் நிலைப்பாட்டை கோரும் மத்திய சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

Lankathas Pathmanathan

பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கும் Manitoba

Lankathas Pathmanathan

Leave a Comment