Quebec பால் ஆலை தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக 2 மில்லியன் லிட்டர் பால் கொட்டப்பட்டது.
Quebec பால் ஆலையில் ஏற்பட்ட தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக புதன்கிழமை முதல் 2 மில்லியன் லிட்டர் பால் கொட்டப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.
Quebecவில் உள்ள Granby Agropur ஆலையில் 250 தொழிலாளர்கள், June 29 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆலை ஒரு நாளில் 800,000 லிட்டர் பாலை பதப்படுத்துகிறது.
இது Quebecகில் பால் உற்பத்தியில் சுமார் 10 சதவீதம் ஆகும்.
தற்போது இந்த ஆலை மூடப்பட்டதால், பல Quebec பால் பண்ணையாளர்கள் தங்கள் பால் கெட்டுப் போகும் முன் பதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.